Advertisment

ஆவடி தொழிற்சாலை வேலை வாய்ப்பு; டிப்ளமோ, ஐ.டி.ஐ தகுதிக்கு 271 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

சென்னை, ஆவடி கனரக வாகன தொழிற்சாலையில் ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு; 271 பணியிடங்கள்; விருப்பம் உள்ளவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tank aavadi

சென்னை, ஆவடி கனரக வாகன தொழிற்சாலை வேலைவாய்ப்பு

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 271 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Junior Manager (Design) 

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Degree in Engineering Design/ Tool Engineering (and) M. Tech in Defence Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Diploma Technician 

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

Civil – 4

Quality & Inspection – 2

Design – 3

கல்வித் தகுதி: Diploma in Civil Engineering/ Mechanical Engineering / Production Engineering / Electrical and Electronics Engg. with Post Diploma/Certification in Quality Assurance / Inspection / Quality Control (or) Diploma in Metallurgy Engg./ Diploma in Automobile Engineering / Electrical & Electronics/ Engineering Design with PG Diploma in Industrial Design (CAD) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Junior Technician

காலியிடங்களின் எண்ணிக்கை: 259

Blacksmith – 5

Electrician – 35

Fitter Electronics – 10

Fitter General – 69

Fitter Auto Electric – 7

Fitter AFV – 20

Millwright – 5

Machinist – 40

OMHE – 8

Rigger – 5

Painter – 5

Welder – 50

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 21,000

Assistant (Legal)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: LLB/Graduate with 3 years LLB படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

வயது தகுதி: 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.avnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600054

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.07.2024

மேலும் விவரங்களுக்கு www.avnl.co.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment