இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் டிப்ளமோ, ஐ.டி.ஐ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 271 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 05.07.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Junior Manager (Design)
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: Degree in Engineering Design/ Tool Engineering (and) M. Tech in Defence Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 30,000
Diploma Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
Civil – 4
Quality & Inspection – 2
Design – 3
கல்வித் தகுதி: Diploma in Civil Engineering/ Mechanical Engineering / Production Engineering / Electrical and Electronics Engg. with Post Diploma/Certification in Quality Assurance / Inspection / Quality Control (or) Diploma in Metallurgy Engg./ Diploma in Automobile Engineering / Electrical & Electronics/ Engineering Design with PG Diploma in Industrial Design (CAD) படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
Junior Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 259
Blacksmith – 5
Electrician – 35
Fitter Electronics – 10
Fitter General – 69
Fitter Auto Electric – 7
Fitter AFV – 20
Millwright – 5
Machinist – 40
OMHE – 8
Rigger – 5
Painter – 5
Welder – 50
கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 21,000
Assistant (Legal)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: LLB/Graduate with 3 years LLB படித்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 23,000
வயது தகுதி: 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.avnl.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: The Chief General Manager, Heavy Vehicles Factory, Avadi, Chennai – 600054
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.07.2024
மேலும் விவரங்களுக்கு www.avnl.co.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“