scorecardresearch

ICF Jobs: குறைந்த கல்வித் தகுதி; 876 பணியிடங்கள்: நீங்க ரெடியா?

சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை வேலைவாய்ப்பு; 876 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐடிஐ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ICF Jobs: குறைந்த கல்வித் தகுதி; 876 பணியிடங்கள்: நீங்க ரெடியா?

Chennai ICF recruitment 876 apprentice vacancies 10 and ITI holders apply soon: சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலையில் 10 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 876 பயிற்சியிடங்களுக்கு அறிவிப்பு வெளிவந்துள்ளது.

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் அப்ரண்டிஸ் பயிற்சி பெறுவதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. தொழில்பழகுநர் சட்டம் 1961, விதிகளுக்கு உட்பட்டு, தொழில் பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஐடிஐ படித்தவர்களும், பத்தாம் வகுப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2022

இதையும் படியுங்கள்: IBPS Clerk 2022; பட்டப் படிப்பு தகுதி; 6,035 கிளர்க் பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 876

பயிற்சி விபரங்கள்

CARPENTER

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 87 (FRESHERS – 37, Ex-ITI – 50)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது CARPENTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS –  2 வருடம், Ex-ITI –  1 வருடம்

ELECTRICIAN

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 188 (FRESHERS – 32, Ex-ITI – 156)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது ELECTRICIAN பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS –  2 வருடம், Ex-ITI –  1 வருடம்

FITTER

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 208 (FRESHERS – 65, Ex-ITI – 143)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது FITTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS –  2 வருடம், Ex-ITI –  1 வருடம்

MACHINIST

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 63 (FRESHERS – 34, Ex-ITI – 29)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது MACHINIST பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS –  2 வருடம், Ex-ITI –  1 வருடம்

PAINTER

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 83 (FRESHERS – 33, Ex-ITI – 50)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது PAINTER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS –  2 வருடம், Ex-ITI –  1 வருடம்

WELDER

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 245 (FRESHERS – 75, Ex-ITI – 170)

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது WELDER பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு: FRESHERS –  1 வருடம் மற்றும் 3 மாதங்கள், Ex-ITI –  1 வருடம்

Programming and System Admin. Asst.

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 2 (Ex-ITI )

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி மற்றும் Computer Operator and Programming Asst. பிரிவில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

பயிற்சி கால அளவு : Ex-ITI –  1 வருடம்

வயதுத் தகுதி : 26.07.2022 அன்று 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், PwBD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம்

1. Freshers – (class 10th) ரூ. 6000/- 

2. Freshers – (class 12th) ரூ. 7000/- 

3. Ex-ITI – ரூ. 7000/-

தேர்வு செய்யப்படும் முறை : பயிற்சி இடங்களுக்கு ஏற்ப 10 ஆம் வகுப்பு, மற்றும் ஐடிஐ படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pb.icf.gov.in/act/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26.07.2022 ஆகும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://pb.icf.gov.in/act/notification.pdf என்ற இணையதளப்பக்கத்தை பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Chennai icf recruitment 876 apprentice vacancies 10 and iti holders apply soon

Best of Express