இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 34 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 08.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Project Nurse II
காலியிடங்களின் எண்ணிக்கை : 34
கல்வித் தகுதி : General Nursing & Midwife course (GNM) (OR) B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 25,400
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nie.gov.in/images/pdf/careers/NIE_PE_Advt_Oct_2023_28.pdf என்ற இணையதளப்பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தின பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துக் கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 08.11.2023
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ICMR-NIE, Chennai
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://nie.gov.in/images/pdf/careers/NIE_PE_Advt_Oct_2023_28.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“