இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 73 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 08.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 60
காலியிட விவரம்
Microbiology/ Biotechnology/ Medical Lab Technology – 23
Biochemistry/ Clinical Pharmacology – 4
Bio-Informatics – 2
Biomedical Engineer / Instrumentation Engineer – 4
Statistics – 4
Computer Programming – 4
Electrical – 2
Health Economics – 2
Mechanic – 1
Network Administration – 3
Pharmacy – 2
Psychology – 1
Server Administration – 3
Social Work/ Sociology – 2
X-Ray- 2
Veterinary Science – 1
கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 30 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 35400 – 112400
Laboratory Attendant
காலியிடங்களின் எண்ணிக்கை : 13
காலியிட விவரம்
Laboratory – 12
Plumber - 1
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் அவசியம். பிளம்பர் பணிக்கு ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 வயது முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ. 18000 – 56900
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://joinicmr.in/login/user என்ற இணையதளப்பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.11.2023
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 300; எஸ்.டி/ எஸ்.சி/ பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://joinicmr.in/images/NIRT_Advertisement_New.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“