scorecardresearch

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; பி.காம், பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!

சென்னை ஐ.ஐ.டி வேலைவாய்ப்பு; பி.காம் மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை ஐ.ஐ.டி வேலை வாய்ப்பு; பி.காம், பி.இ படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!
Express Photo

சென்னை ஐ.ஐ.டி.,யில் திட்ட அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் சென்னை பிரிவில் திட்ட அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.02.2023

இதையும் படியுங்கள்: NLC Jobs; என்.எல்.சியில் 626 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

Junior Executive (Accounts)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B. com படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,000 – 50,000

Assistant Manager (Accounts)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : CA/ CMA / CS/ ICWA or M. Com / MBA(Finance) படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 27,500 – 1,00,000

Senior Executive (Purchase)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B. com படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 17,000 – 75,000

Junior Executive (Purchase)

காலியிடங்களின் எண்ணிக்கை : 5

கல்வித் தகுதி : B. com படித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,000 – 50,000

Project Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BE/BTech படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 30,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.02.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Chennai iit recruitment 2023 for executive posts apply soon

Best of Express