சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி) தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 08.05.2023
இதையும் படியுங்கள்: சென்னை தேசிய பசுமை தீர்ப்பாய வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!
Field and Assembly Technician
காலியிடங்களின் எண்ணிக்கை: 11
கல்வித் தகுதி: ITI & diploma - EEE/ECE/E&I படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 13,000 – 15,000
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.05.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://icandsr.iitm.ac.in/recruitment/admin/uploads/announce/Announcement%20for%20the%20post%20of%20Field%20And%20Assembly%20Technician.%20Advt%2061..pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil