சென்னையில் உள்ள தன்னாட்சி பெற்ற லயோலா கல்லூரியில் ஆய்வக உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 02.02.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தட்டச்சர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
ஆய்வக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவறை எழுத்தர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 8
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
துப்புரவாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 6
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வாட்டர்மேன்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தோட்டக்காரர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தோட்டி
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மார்க்கர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பண்டக காப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 32 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Secretary & Correspondent, Loyola College, Chennai - 600034
விண்ணப்பிக்க கடைசி தேதி: 02.02.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.