சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை; விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் பணியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் பணியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai, metrorail, cmrl, japan, loan, corroidor சென்னை, மெட்ரோ ரயில், சிஎம்ஆர்எல், ஜப்பான், கடனுதவி, வழித்தடம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 20.01.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

Additional General Manager / Joint General Manager (Legal)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Graduate in Law (B.L / LLB) படித்திருக்க வேண்டும். மற்றும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 1,60,000

Joint General Manager / Deputy General Manager (Architect)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.Arch படித்திருக்க வேண்டும். மேலும் 13 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி: 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 1,25,000 – 1,45,000

Manager (Design)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E / B.Tech (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி: 38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 85,000

வயது வரம்பு தளர்வு: விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.01.2025

விண்ணப்பக்க கட்டணம்: ரூ 300. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 50

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://chennaimetrorail.org/wp-content/uploads/2024/12/Detailed-Employment-Notification-No.-CMRL-HR-CON-14-2024-dated-18-12-2024-for-the-post-of-AGM-JGM-Legal-Other-posts-1.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

Jobs Chennai Metro

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: