சென்னை மாநகர போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Chennai MTC invites application for 325 Mechanic Diesel vacancies: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 325 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு; 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) 325 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஆட்டோமொபைல் துறையில் டீசல் மொக்கானிக் (Mechanic Diesel) அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 325 பயிற்சி பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பயிற்சி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.10.2021

டீசல் மெக்கானிக் (Mechanic Diesel)

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 325

கல்வித் தகுதி : 10 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,000 – 9,257

பயிற்சி கால அளவு: 25 மாதங்கள் (அடிப்படை பயிற்சி – 6 மாதங்கள், வேலைசார்ந்த பயிற்சி – 19 மாதங்கள்)

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க https://apprenticeshipindia.org/apprenticeship/opportunity-view/6139d68934c1071e921deaa3 என்ற இணையத்தள பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai mtc invites application for 325 mechanic diesel vacancies

Next Story
SSC Recruitment 2021; மத்திய அரசு வேலை; 3244 பணியிடங்கள்; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com