சென்னை மாநகர போக்குவரத்து கழக வேலை வாய்ப்பு; 500 பணியிடங்கள்; ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 500 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு; ஐ.டி.ஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 500 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு; ஐ.டி.ஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

author-image
WebDesk
New Update
சென்னை மாநகர போக்குவரத்து கழக வேலைவாய்ப்பு; 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 500 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் (MTC) 500 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Advertisment

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் அப்ரண்டிஸ் எனப்படும் தொழில் பழகுநர் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பயிற்சி பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு செப்டம்பர் 26 ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

MTC Apprenticeship 

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 500

Advertisment
Advertisements

மெக்கானிக்கல் மோட்டார் வாகனம் – 250

மெக்கானிக்கல் டீசல் – 90

ஆட்டோமொபைல் -32

எலக்ட்ரிக்கல் – 32

வெல்டர் – 30

ஃபிட்டர் – 52

டர்னர் – 4

பெயிண்டர் – 10

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை: ரூ. 14,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்துக்கழக தொழிற்பயிற்சி பள்ளியில் நடைபெறும் சிறப்பு முகாமில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Jobs Mtc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: