சென்னை தேசிய பசுமை தீர்ப்பாய வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உதவியாளர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் உதவியாளர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
New Update
National Green Tribunal

National Green Tribunal

சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியுள்ளவர்கள் 03.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; ரூ60,000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

Advertisment
Advertisements

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் ஆங்கிலத்தில் டைப் செய்யவும், கணினி இயக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 21 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Registrar, National Green Tribunal, Southern Zone Bench, Kalas Mahal, PWD Estate, Chepauk, Chennai – 600005.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://greentribunal.gov.in/sites/default/files/public_notice/Engagment%20of%20Office%20Assistant%20NGT(SZB).pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: