சென்னையில் மத்திய அரசு வேலை; 12, டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு வாய்ப்பு!

சென்னையில் உள்ள தேசிய காற்று ஆற்றல் நிறுவன வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னையில் உள்ள தேசிய காற்று ஆற்றல் நிறுவன வேலைவாய்ப்பு; 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்!

Chennai National Institute of Wind Energy recruitment 2022 for various jobs: சென்னை தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

மத்திய அரசு நிறுவனமான தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவி இயக்குனர், இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 17.08.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்: சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை; டிப்ளமோ, டிகிரி, பி.இ, பி.டெக் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

உதவி இயக்குனர் (ASSISTANT DIRECTOR (FINANCE & ADMINISTRATION))

Advertisment
Advertisements

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 56,100

நிர்வாக உதவியாளர் (EXECUTIVE ASSISTANT)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,400

இளநிலை பொறியாளர் (JUNIOR ENGINEER)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Diploma in Mechanical Engineering/ Computer Engineering / Computer Science / Computer Technology படித்திருக்க வேண்டும். மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,400

இளநிலை நிர்வாக உதவியாளர் (JUNIOR EXECUTIVE ASSISTANT)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 25,500

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://niwe.res.in/careers.php என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt%20No.02-2022_Asst.Dir(F&A)_EA_JEA_JE.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: