Advertisment

சென்னை ஷிவ் நாடார் பல்கலை. நுழைவுத் தேர்வு; விண்ணப்பச் செயல்முறை ஆரம்பம்

சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு; விண்ணப்பதாரர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சென்னை ஷிவ் நாடார் பல்கலை. நுழைவுத் தேர்வு; விண்ணப்பச் செயல்முறை ஆரம்பம்

சென்னை, ஷிவ் நாடார் பல்கலைக்கழகம்

சென்னை ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு செயல்முறை தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

Advertisment

இந்தியாவின் முன்னணி மென்பொருள் நிறுவனமான ஹெச்.சி.எல் நிறுவன குழுமத்தின் கல்வி நிறுவனமான ஷிவ் நாடார் பல்கலைக்கழகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இந்த நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பச் செயல்முறை தற்போது தொடங்கியுள்ளது.

இதையும் படியுங்கள்: 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு; தமிழ் மொழித் தாள் எழுதுவதில் இருந்து விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

விண்ணப்பதாரர்கள் மார்ச் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணையதளத்தில் பதிவு செய்யலாம்: https://www.snuchennai.edu.in/

நுழைவுத் தேர்வுகள் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும். சென்னை, டெல்லி, மும்பை, கோவை, மதுரை, பெங்களூர், ஹைதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம் கொல்கத்தா, உள்ளிட்ட பத்து நகரங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெறும்.

பல்கலைக்கழகம் B.Tech Computer Science (IoT), B.Tech AI மற்றும் Data Science, B.Tech Computer Science (Cyber Security), B.Com (Professional Accounting), B.Com/B.Com (Hons) மற்றும் B.Sc Economics (Data Science) உள்ளிட்ட ஆறு இளங்கலை படிப்புகளை வழங்குகிறது.

தற்போது, ​​பல்கலைக்கழகத்தில் 815 மாணவர்கள் மற்றும் 55 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Education
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment