சென்னை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
வழக்குப் பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: சமூகப் பணியில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 18,000
பாதுகாப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: அரசு அல்லது புகழ்பெற்ற நிறுவனத்தில் பாதுகாப்பாளராக பணியாற்றிய அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 12,000
பன்முக உதவியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: ஏதாவது அலுவலகத்தில் பராமரிப்பாளராக பணியாற்றிய அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 10,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/11/2024112273.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை - 600001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/11/2024112220.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“