Advertisment

சென்னை சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச தகுதி போதும்; உடனே விண்ணப்பிங்க!

சென்னை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; குறைந்தபட்ச கல்வித் தகுதி போதும்; உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Central Govt Jobs,

அரசு வேலைவாய்ப்பு

சென்னை மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில், அலுவலர், உதவியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.05.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

இதையும் படியுங்கள்: சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

வழக்கு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி : சமூகப் பணியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

பாதுகாப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : பாதுகாப்பாளராக பணியாற்றிய முன் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

பன்முக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 6,400

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8வது தளம், சிங்கார வேலன் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை 600001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.05.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2023/05/2023050517.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment