Advertisment

சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

சென்னை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 10 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
Jobs women

சென்னை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

சென்னை மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் தென் சென்னையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாப்பாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

வழக்குப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : Bachelor's Degree in Social Work படித்திருக்க வேண்டும். அல்லது Master’s of Social Work, Counselling Psycology or Development Management படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,000

பாதுகாப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அரசு அல்லது புகழ் பெற்ற நிறுவனத்தில் பணியாற்றிய முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

பன்முக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும். பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 6,400

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/03/2024030447.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8 ஆவது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை - 01

விண்ணப்பிக்க கடைசி தேதி : 13.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2024/03/2024030417.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment