New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/06/tn-govt-jobs.jpg)
சென்னை மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; உதவியாளர் பணியிடம்; 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!
சென்னை மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இயங்கி வரும் இளைஞர் நீதிகுழுமத்திற்கு உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் (Assistant –cum-Data Entry Operator) பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.05.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் டிப்ளமோ சான்றிதழ் படிப்பு வைத்திருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுத் தகுதி: 01.01.2025 அன்று 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ. 11,916
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://chennai.nic.in/chennai-computer-operator-on-a-consolidated-pay-basis-to-be-appointed-in-the-youth-justice-unit-along-with-an-assistant/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 13, சாமி பிள்ளைத் தெரு, சூளை நெடுஞ்சாலை, சூளை, சென்னை - 600112
விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.05.2025
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.