சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (JUNIOR TECHNICAL ASSOCIATE) பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் (JTA)
காலியிடங்களின் எண்ணிக்கை : 14
கல்வித் தகுதி : Diploma in Civil Engineering or Bachelor’s Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 18 வயது முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம்: ரூ. 25,000 – 30,000 (பணியிடத்தைப் பொறுத்து மாறுபடும்)
தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. டிப்ளமோ அல்லது டிகிரி படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிப்ளமோ அல்லது டிகிரி மதிப்பெண்கள் 75 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். உயர் கல்விக்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://sr.indianrailways.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.10.2023
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://sr.indianrailways.gov.in/cris/uploads/files/1695562512731-JTA_Notification.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“