சென்னையில் உள்ள மாணவர்கள் மட்டுமல்லாது வெளியூரில் உள்ள மாணவர்களும் சென்னையில் கல்லூரியில் படிக்க அதிகம் விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக பொறியியல் படிப்பு குறித்த ஆர்வம் மாணவர்கள் மட்டுமல்லாது பெற்றோர்கள் மத்தியிலும் அதிகமாக உள்ளது.
இதனைத் கருத்தில் கொண்டு புதிதான பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள டாப் 25 பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலை அண்ணா பல்கலைகழகம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மாணவர்கள் அதிகம் விரும்பும் சென்னையில் டாப் 25 இடத்தை பிடித்துள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளில் கடைசி 5வருடங்களில், நடந்த மாணவர் சேர்க்கையில் கம்யூட்டர் சயின்ஸ் மாணவர்களை கணக்கெடுத்து அதில் பொது பிரிவினரின் கட்ஆப் மதிப்பெண்களை எடுத்து 5 வருடத்தில் பெற்ற மதிப்பெண்களின் சராசரி அடிப்படையில் இந்த பட்டியல தயார் செய்யப்பட்டுள்ளது.
TNEA Counselling; தமிழக டாப் 25 பொறியியல் கல்லூரிகள் இவை தான்!
கல்வியாளர் ரமேஷ்பிரபா தனது யூடியூப் சேனலில் சென்னையில் உள்ள டாப் கல்லூரிகள் எவை என பட்டியலிட்டுள்ளார். அதன்படி தற்போது சென்னையில் டாப் 25 இடங்களை பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் :
25. பிரின்ஸ் ஸ்ரீவெங்கடேஷ்வரா பத்மாவதி இன்ஜினியரிங் கல்லூரி – 162.73
24. வேல் டெக் மல்டி டெக் டாக்டர் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா இன்ஜினியரிங் கல்லூரி – 165.17
23. ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – 166.25
22. சவிதா இன்ஜினியரிங் கல்லூரி – 168.47
21. ஜேப்பியார் இன்ஜினியரிங் கல்லூரி – 169.63
20. பனிமலர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – 169.65
19. ஸ்ரீ சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – 172.50
18. எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை இன்ஜினியரிங் கல்லூரி – 173.55
17. சென் ஜோசப் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – 174.54
16. ஆர்.எம்.கே. காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் டெக்னாலஜி – 175.76
TNEA கவுன்சிலிங்; குறைந்த கட் ஆஃப்-க்கும் டாப் காலேஜ் கிடைக்க… இப்படி செய்யுங்க!
15. வேளம்மாள் இன்ஜினியரிங் கல்லூரி – 176.44
14. பனிமலர் இன்ஜினியரிங் கல்லூரி – 181.38
13. ஆர்.எம்.டி இன்ஜினியரிங் கல்லூரி – 182.59
12. சென்னை இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – 183.97
11. மீனாட்சி சுந்தர்ராஜன் இன்ஜினியரிங் கல்லூரி – 185.77
10. ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரி – 186.10
09. ஸ்ரீ சாய்ராம் இன்ஜினியரிங் கல்லூரி – 186.16
08. ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரி – 186.99
07. ஆர்.எம்.கே இன்ஜினியரிங் கல்லூரி – 188.90
06. சென் ஜோசப் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் – 189.09
05. லயோலா ஐகேம் – 189.55
04 ஸ்ரீ வெங்கடேஷ்வரா காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் – 192.61
03 ஸ்ரீ சிவசுப்ரமணிய நாடார் காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் – 195.50
02. மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி – 196.69
01. காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங் கிண்டி – 198.90
தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு பொறியியல் கல்லூரிகளுக்கான சேர்க்கையை நடத்தி வருகிறது. இந்த பொறியியல் படிப்புகளுக்கு https://www.tneaonline.org/ என்ற இணையதளப் பக்கம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“