5 முதன்மைக் கல்வி அலுவலர்கள் டிரான்ஸ்ஃபர், 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு!

பள்ளிக்கல்வித்துறையில் 5 முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிவிப்பு

chief education officers transferred and deo's promoted - 5 முதன்மைக் கல்வி அலுவலர்கள் டிரான்ஸ்ஃபர், 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு!
chief education officers transferred and deo's promoted – 5 முதன்மைக் கல்வி அலுவலர்கள் டிரான்ஸ்ஃபர், 3 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதவி உயர்வு!

பள்ளிக்கல்வித்துறையில் 5 முதன்மைக் கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், 3 மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக் கல்வித் துறையில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழுள்ள வகுப்பு III-ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடத்தில் பணிபுரியும் கீழ்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி, அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

த.ராஜந்திரன் (முதன்மை கல்வி அலுவலர், திருவள்ளூர்) – சென்னை முதன்மை கல்வி அலுவலராக மாற்றம்

ஆர்.திருவளர்செல்வி (முதன்மை கல்வி அலுவலர், சென்னை) – திருவள்ளூர் முதன்மை கல்வி அலுவலராக மாற்றம்

ஆர்.பூபதி (துணை இயக்குனர், சட்டம், தொடக்கக் கல்வி இயக்கம், சென்னை 6)  – திருநெல்வேலி முதன்மை கல்வி அலுவலராக மாற்றம்

ச.செந்திவேல்முருகன் (முதன்மை கல்வி அலுவலர், கன்னியாகுமரி) – துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை – 6

எஸ். முருகேசன் (துணை இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை 6) – செயலாளர், தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகம், சென்னை – 6

முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறுவோர்:

எஸ்.மணிவண்ணன் (மாவட்டக் கல்வி அலுவலர், உடுமலைப் பேட்டை, திருப்பூர்)  – திண்டுக்கல் முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு

எம்.வேதரத்தினம் (மாவட்டக் கல்வி அலுவலர், நாகை) – துணை இயக்குனர்(சட்டம்), தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை – 6

எம்.இராமன் (மாவட்டக் கல்வி அலுவலர், திருவாரூர்) – கன்னியாகுமரி முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chief education officers transferred and deos promoted

Next Story
TNPSC Recruitment 2019: டிஎன்பிஎஸ்சி-யின் சுற்றுலா ஆலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியீடுTNPSC Recruitment 2019, TNPSC Tourist Officer Vacancy 2019 டிஎன்பிஎஸ்சி ,சுற்றுலா ஆலுவலர்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com