தலைமைச் செயலக பணிக்காக டி.என்.பி,எஸ்,சி குரூப் – 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள அமைச்சுப் பணி உதவியாளர்கள் இலவச பயிற்சிக்கு அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையத் தலைவரும், தலைமைச் செயலருமான இறையன்பு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் தேர்வர்களுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சர் தியாகராயா கல்லூரி, நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் இயங்கும் பயிற்சி மையங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. டி.என்.பி.எஸ்.சி குரூப்-5ஏ பிரிவில் அடங்கிய உதவி பிரிவு அலுவலர், உதவியாளர் பணிகளுக்கான 161 காலி இடங்களைஅமைச்சுப் பணி, நீதி அமைச்சுப் பணியில் பணிபுரியும் தகுதி வாய்ந்த உதவியாளர், இளநிலை உதவியாளர்களை கொண்டு பணிமாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கான எழுத்து தேர்வு நடக்க உள்ளது. இத்தேர்வுக்கும் இந்த மையங்களில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்து, பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் http://www.civilservicecoaching.com என்ற இணையத்தில்விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரியசான்றிதழ்களுடன், சென்னை நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் செயல்படும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய அலுவலகத்தில் அக்டோபர் 26 ஆம் தேதி வரை நேரடியாக வழங்கலாம். ceccnandanam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம்.” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“