10 ஆம் வகுப்பு தேர்வுகள் முடிந்த பிறகு தான், வாழ்க்கையில் அடுத்து என்ன செய்யலாம்? என்ற கேள்வியை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அந்த கேள்விக்கான பதில், வாழ்நாள் முழுவதும் நம்மை தொந்தரவு செய்யக்கூடியதாய் இருக்கும். எனவே, முறையான திட்டமிடல் தேவைப்படுகிறது. உங்களுக்கு பயன்படும் வகையில் நான்கு வழிமுறைகளை கொடுத்துள்ளோம்.
1: வெவ்வேறு வேலைகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்: முதலாவதாக, சாத்தியமான அனைத்து வகையான பாடப்படிப்புகளின் பின்புலங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். வெவ்வேறு படிப்புகளில் உள்ள வேலை வாய்ப்புகள், பொருள் ஈட்டுவதற்கான சாத்தியக்கூறுகள், அந்த துறையில் சாதித்த சில பிரபலங்களின் வாழ்க்கை முறை போன்றவைகளை ஆய்வு நடத்துங்கள். இதில் ஒரு முக்கிய விசயம் என்னவென்றால், நீங்கள் உங்கள் எதிர்காலத்தை தேர்ந்தெடுப்பதற்கான இந்த ஆய்வுகள் பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும்.
2: உங்களை அறிந்து கொள்ளுங்கள்: இரண்டாவதாக, முதலில் உங்களை நீங்கள் அறிந்து கொள்வது மிக முக்கியம். பல்வேறு வாழ்க்கை முறை பற்றி ஆய்வு நடத்திய நீங்கள், தற்போது உங்களின் தனித் திறமை எது?, ஆளுமை என்ன? உண்மையான ஆர்வம் எங்குள்ளது? போன்ற கேள்விகளை கொண்டு உங்களைப் பகுப்பாய்வு செய்ய தொடங்குகள். சிறந்த எதிர்காலத்தை தேர்ந்தெடுக்க உதவும், சைக்கோமெட்ரிக் அசெஸ்மென்ட் டெஸ்ட் உதவியையும் பெறுங்கள்.
3: சரியான படிப்பை கண்டறியுங்கள் : இப்போது வெவ்வேறு படிப்புகளின் பின்புலங்களும், உங்கள் சொந்த ஆளுமையைப் பற்றிய புரிதலும் உங்களுக்கு கிடைத்தாகிவிட்டது. அடுத்த கட்டமாக, உங்களுக்கான சரியான பாடத்தை நீங்கள் சரியான அளவில் அடையாளம் காண வேண்டும். இது உங்கள் வாழ்வில் மிக முக்கியமான முடிவு. எனவே, அதீத கவனம் தேவைப்படுகிறது. உங்கள் பலத்தின் அடிப்படையில் சரியான வாழ்க்கையைத் நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். கல்வி ஆலோசகரின் உதவியை இந்த நேரத்தில் எடுத்துக்கொள்வது உதவியாக இருக்கும்.
4. சரியான படப்பிரிவை தேர்ந்தெடுங்கள்: கலையியல்,காமர்ஸ், அறிவியல் போன்ற அனுமதிக்கப்படும் பாடப்பிரிவுகளில் சரியான கலவையை தேர்ந்தெடுங்கள். காலம் காலமாக கூறப்படும் சில கட்டுக் கதைகளில் இருந்தும் வெளியே வர கற்றுக்கொள்ளுங்கள்.
உதாரணமாக:
- அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மட்டுமே அறிவியல் பாடங்களை தேர்வு செய்ய முடியும்.மேலும், அவர்கள் கலை அல்லது காமர்ஸ் போன்ற பாடப் பிரிவுகள தேர்ந்தெடுக்கக் கூடாது.
- - பலவீனமான மாணவர்கள் மட்டுமே கலை பிரிவுகளை எடுக்கலாம். இந்த கலையியல் பட்டம் பெற்றவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பும் கிடையாது.
- கலையியல் பாடம் மாணவிகளுக்கு மட்டுமே பொருந்தும்.
முதலில், இதுபோன்ற பாலின நிலைப்பாட்டை உடைக்க கற்றுக் கொள்ளுங்கள். கட்டுக்கதைகளை உடைத்து, உங்களை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.