Advertisment

வழிகாட்டும் ஆசிரியர்கள் - டெல்லி அரசுப் பள்ளிகளின் வெற்றிக்கு காரணம் ?

வழிகாட்டி ஆசிரியர்கள் டெல்லி அரசின் மற்ற முயற்சிகளான மகிழ்ச்சி பாடத்திட்டம் , தொழில்முனைவோர் பாடத்திட்டம் போன்றவைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Mentor teachers - Delhi Governemnt SCHOOL programe : Chunauti (challenge)

Mentor teachers - Delhi Governemnt SCHOOL programe : Chunauti (challenge)

Delhi govt’s education reforms : அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசாங்கம் கடந்த 2016 ம் ஆண்டு பள்ளியில் இருந்து மாணவர்கள் பாதியில் வெளியேறுவதை தடுப்பதற்காக சுனாட்டி (சவால்) என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. டெல்லி அரசுப் பள்ளியில் பணிபுரியும் 200 ஆசிரியர்களை இதற்காக பிரத்தியோகமாக தேர்ந்தெடுத்து 'கல்வி வழிகாட்டி' என்ற சிறப்பு பொறுப்புகளும் கொடுக்கப்பட்டன.

Advertisment

மாணவர்கள் எழுத்தறிவு, கணிதறிவு  பெற்றுள்ளனரா? என்பதை அடையாளம் காண்பதை தாண்டி, மாணவர்களின் வாழ்கையில் ஆசிரியர்களின் பங்கு என்ன? டெல்லி அரசுக்கும்,பள்ளிக்கும் இருக்கும் இடைவெளியை ஆசிரியர்கள் மூலம் எவ்வாறு குறைப்பது? போன்ற கேள்விகளுக்கு பதிலாய் இந்த திட்டம் துவங்கப்பட்டது.

திட்டத்தின் கீழ், ஒரு  'வழிகாட்டி ஆசிரியர்'  ஐந்து முதல் ஆறு பள்ளிகளை மேற்பார்வையிடுவார். ஒவ்வொரு பள்ளிக்கும் வாரத்திற்கு ஒரு முறையாவது சென்று அங்குள்ள ஊழியர்கள், மாணவர்களுடன் உரையாடவேண்டும். அரசாங்கத்தின் வழிமுறைகள் பள்ளிகளில் பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்வதும், அரசாங்கத்திற்கு தேவைப்படும் கருத்துக்களைக் கொடுப்பதும் இவர்களின் வேலை.

சிங்கப்பூர், மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் இந்த வழிகாட்டு ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்ட்டன.

சுனாட்டி ( சவால்) திட்டத்தால் மாணவர்கள் மத்தியில் கற்றல் மற்றும் எண்ணிக்கைத்  திறனில்  கணிசமான முன்னேற்றம் அடைந்தது. உதாரணமாக,  2018 ம் ஆண்டில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் 48% சதவீதம் பேரே தங்களது பாடத் திட்டங்களை எழுத்துக் கூட்டி படிப்பவராய் இருந்தனர். தற்போது , இந்த எண்ணிக்கை 63% என்று டேட்டா சொல்கிறது.  கணிதத்தில், 56% மாணவர்கள்  மட்டுமே தங்கள் வயதிற்கேற்ற கணக்குகளைத் தீர்த்தனர், தற்போது இந்த எண்ணிக்கை 73% ஆக உயர்ந்துள்ளது

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா - வீடியோ : 

வழிகாட்டி ஆசிரியர்கள் டெல்லி அரசின் மற்ற முயற்சிகளான மகிழ்ச்சி பாடத்திட்டம் , தொழில்முனைவோர் பாடத்திட்டம் போன்றவைகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.  எஸ்.எம்.சி கூட்டங்கள் போன்ற பள்ளிகளின் அன்றாட செயல்பாட்டிலும் அவர்கள் பங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு கெஜ்ரிவால் ஆட்சி அமைத்த பிறகு, மூத்த தலைவர்கள், ஆலோசகர்கள், கல்வித் துறை அதிகாரிகள், கல்வி அமைச்சர் மனிஷ் சிசோடியா ஆகியோர் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்விதரத்தை  எவ்வாறு மேம்படுத்துவது ? என்ற பேச்சுவார்த்தையின் மூலம் உருவானது தான் இந்த சுனாட்டி (சவால்) திட்டமாகும்.

தற்போது, நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டுஃப்லோ மற்றும் அபிஜித் பானர்ஜி ஆகியோர் இந்தியாவில் குழந்தைகளின் கல்வியைக் குறித்து பல ஆய்வுகளை மேற் கொண்டிருந்தனர். உதாரணமாக, தன்னார்வ தொண்டு நிறுவனமான 'பிரதாம்' செயல்படுத்தி வரும் ‘சரியான மட்டத்தில் கற்பித்தல்’' என்ற திட்டத்தையும் ஆய்வு செய்தனர். இவர்கள், 2016 ல் டெல்லி முதல்வர், துணை முதல்வரை சந்தித்து, சுனாட்டி (சவால்) திட்டத்திற்கு தங்களது பரிந்துரைகளை தந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Arvind Kejriwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment