scorecardresearch

காவலர் ஆக விருப்பமா? மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 1149 காலியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 1149 காவலர் பணியிடங்கள்; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

CISF recruitment 1149 constable vacancies apply soon: காவலர் ஆக விரும்புபவர்களுக்கு அருமையான வாய்ப்பு. விருப்பமுள்ளவர்கள் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையின் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய பாதுகாப்பு படைகளில் ஒன்றான மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் 1149 காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணியிடங்களில் தமிழகத்தில் மட்டும் 41 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

காவலர் CONSTABLE/FIRE (MALE)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1149

வயதுத் தகுதி: விண்ணப்பதாரர் 04.03.2022 அன்று 18 வயது முதல் 23 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.

கல்வித் தகுதி: 12-ம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதிகள்: உயரம் – 170 செ.மீ

மார்பளவு – 80 – 85 செ.மீ

சம்பளம் : ரூ. 21,700-69,100

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு உடற்தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு:

எழுத்துத் தேர்வு கொள்குறி வகை வினாத் தேர்வு (Objective Test) ஆக நடைபெறும். இந்த கொள்குறி வகை வினாத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language – 25), கணித திறனறிதல் (Quantitative Aptitude – 25) திறனறிதல் (Reasoning Ability – 25) மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் (General Knowledge and Awareness- 25) ஆகிய பகுதிகளில் இருந்து மொத்தம் 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான மொத்த கால அளவு மொத்தம் 2 மணி நேரம். 

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.100, SC/ST மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.cisfrectt.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி 04.03.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.cisfrectt.in/notifications/Fire21_Notification_English.pdf  என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Educationjobs news download Indian Express Tamil App.

Web Title: Cisf recruitment 1149 constable vacancies apply soon