CISF Recruitment 2019 Online Registration Ends Today: சென்ட்ரல் இண்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி ஃபோர்ஸ் எனப்படும் சி.ஐ.எஸ்.எஃப்-பின் 429 ஹெட் கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான முன்பதிவு இன்றுடன் முடிகிறது. இதற்கு cisf.gov.in or cisfrectt.in என்ற தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 7-வது ஊதிய கமிஷனின் படி 25,500 முதல் 81,100 வரை சம்பளம் வழங்கப்படும்.
இதற்கு அப்ளை செய்வதற்கு முன்னர், இதற்கான தகுதியை விண்ணப்பதாரர்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர் 10 மற்றும் 12-ம் வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மொத்தம் 3 லெவல்களைக் கொண்டுள்ளது. முழு மருத்துவ பரிசோதனை, ஆவணங்கள் சரிபார்ப்பு, ஓ.எம்.ஆர் அல்லது சி.பி.டி எழுத்துத் தேர்வு, திறன் அல்லது தட்டச்சு சோதனை ஆகியன அதில் அடங்கும்.
CISF recruitment 2019: காலியிட விபரம்
மொத்த பணியிடம் - 429
ஆண்கள் - 328
பெண்கள் - 37
எல்.டி.சி.இ - 64
CISF Recruitment 2019: எப்படி அப்ளை செய்வது?
சி.ஐ.எஸ்.எஃப்பின் அதிகாரப்பூர்வ தளமான cisfrectt.in -ஐ விசிட் செய்துக் கொள்ளுங்கள்.
ஹோம் பேஜில் இருக்கும் Register/Login button-னை க்ளிக் செய்துக் கொள்ளுங்கள்.
ஒரு வேளை நீங்கள் புதிய பயனாளராக இருந்தால், Register-ரை க்ளிக் செய்து, தந்தை பெயர், பிறந்த தேதி, பாலினம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு உள் நுழையவும். ஏற்கனவே பயனாளராக இருந்தால் நேரடியாக லாக் இன் செய்துக் கொள்ளவும்.
இப்போது சி.ஐ.எஸ்.எஃப் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க, தனி விபரம், அடிப்படை விபரம், தொடர்பு விபரம் ஆகியவற்றை பதிவு செய்யவும்.
தேவையான அனைத்தையும் பூர்த்தி செய்து, பிறகு ‘சப்மிட்’ என்பதை க்ளிக் செய்யவும்.
இந்த பதிவு வெற்றி பெற்றதன் அடையாளமாக, ஐ.டி மற்றும் பாஸ்வேர்ட் பதிவு செய்யப்பட்ட மெயில் ஐ.டி மற்றும் தொடர்பு எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். பிறகு, விண்ணப்பதாரரின் ஃபோட்டோ மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து அட்டாச் செய்யவும்.