மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காக்கி அணிய வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 451 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 22.02.2023க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை. வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு படித்தவர்கள் அப்ளை பண்ணுங்க!
காவலர்
காலியிடங்களின் விவரம்
Constable/ Driver – 183
Constable/ (Driver -Cum -Pump -Operator) – 268
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : 22.02.2023 அன்று 21 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 21,700- 69,100
வயது வரம்பு தளர்வு : SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, திறனறி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cisfrectt.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.02.2023
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. ஆனால் SC / ST பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_19113_10_2223b.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil