Advertisment

CISF Jobs: மத்திய காவல்துறையில் 459 பணியிடங்கள்; 12-ம் வகுப்பு தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படை வேலைவாய்ப்பு; 459 பணியிடங்கள்; 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக போலீஸ் தேர்வு: கட் ஆஃப் எப்படி இருக்கும்?

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காக்கிச்சட்டை போட வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Advertisment

மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காவல் உதவி ஆய்வாளர் ஸ்டெனோகிராபர் மற்றும் தலைமை காவலர் அமைச்சுப்பணி உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 459 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 25.10.2022க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்: சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Assistant sub Inspector (Stenographer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 104 (ஆண்கள் – 94, பெண்கள் - 10)

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 25.10.2022 அன்று 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 29,200- 92,300

Head Constable (Ministerial)

காலியிடங்களின் எண்ணிக்கை : 355 (ஆண்கள் – 319, பெண்கள் - 36)

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 25.10.2022 அன்று 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 25,500- 81,100

வயது வரம்பு தளர்வு : SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, திறனறி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cisfrectt.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2022

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. ஆனால் SC / ST / PwBD / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cisfrectt.in/file_open.php?fnm=-yXFElc0yKqZz9nGa89pAvxM-l46wUIstdvjN39vfPML8wqN2zEraR74S9Fc4x72HgmkanOnO9IoLS4J4s9FozJjoT2YmQdEJHxCzBYFA_NWPFqZzk2gcvd564g85iV6 என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jobs Police
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment