மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காவலர்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காக்கி சட்டை அணிய வேண்டும் என்ற கனவுடன் இருப்பவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1161 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 03.04.2025க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
CONSTABLE / TRADESMEN
காலியிடங்களின் எண்ணிக்கை: 1161
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுத் தகுதி: 01.08.2025 அன்று 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 21,700- 69,100
வயது வரம்பு தளர்வு: எஸ்.சி/ எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, திறனறி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03.04.2025
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. ஆனால் பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.