Ritika Chopra , Harikishan Sharma
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க, தேசிய தேர்வு முகமை (NTA) சனிக்கிழமை நீட் (NEET-UG 2024) தேர்வில் பங்கேற்ற சுமார் 23.5 லட்சம் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை வெளியிட்டது. வினாத்தாள் கசிந்ததாக வெளியான புகாரையடுத்து நீட் தேர்வில் சர்ச்சையை எழுந்துள்ளது.
மொத்த விண்ணப்பதாரர்களில், 81,000 பேர் (அல்லது 3.49 சதவீதம்) இந்த ஆண்டு நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 600 மற்றும் அதற்கு மேல் பெற்றுள்ளனர். அதேநேரம் 2023 இல், 29,351 தேர்வர்கள் (மொத்தத்தில் 1.43 சதவீதம்), 2022 இல் 21,164 தேர்வர்கள் (மொத்தத்தில் 1.19 சதவீதம்) 600 மற்றும் அதற்கு மேல் பெற்று இருந்தனர்.
2023ல் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெற 600க்கும் அதிகமான மதிப்பெண்கள் போதுமானதாக இருந்தது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தேசிய தேர்வு முகமை வெளியிட்ட நகர வாரியான மற்றும் மைய வாரியான முடிவுகளின்படி, இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்ட மொத்தம் 4,750 மையங்களில் 100 க்கும் மேற்பட்ட மையங்கள் தேசிய சராசரியை விட அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பங்கை (720 மதிப்பெண்களுக்கு 600 க்கு மேல்) மூன்று மடங்கு அதிகமாகக் கொண்டிருந்தன என தேசிய தேர்வு முகமை தரவுகள் காட்டுகின்றன.
இந்த 109 தேர்வு மையங்களில் பாதிக்கும் மேற்பட்டவை ராஜஸ்தானில் உள்ள சிகார் (44) மற்றும் கோட்டா (16) ஆகிய இடங்களில் உள்ளன. அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்ட சிகாரில் உள்ள 44 தேர்வு மையங்களில், பாதிக்கும் மேற்பட்ட மையங்கள் (24) 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற தேசிய சராசரியை விட குறைந்தது ஐந்து மடங்கு (18 சதவீதம் மற்றும் அதற்கு மேல்) அதிகமாக உள்ளது.
இந்தத் தரவுகளின் ஐ.ஐ.டி-சென்னையின் நீட் தேர்வு முடிவுகளின் பகுப்பாய்விற்கு சற்றேறக்குறைய சரியாக உள்ளது. ஐ.ஐ.டி சென்னையின் பகுப்பாய்வை, பெரிய அளவிலான முறைகேடுகளைக் குறிக்கும் வகையில் தேர்வு முடிவுகளில் எந்த அசாதாரணமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முன்வைத்தது. இந்த ஆண்டு நீட் தேர்வில் முதல் 60,000 ரேங்க் பெற்றவர்கள் பல்வேறு நகரங்களில் பரவியுள்ளனர், சிகாரில் 3,405, கோட்டாவில் 2,033 மற்றும் பாட்னாவில் 1,561 பேர் உள்ளனர். பாட்னாவில் கடந்த ஆண்டு முதல் 60,000 ரேங்க்களில் 1,993 பேர் இருந்தனர்.
இந்த வழக்கை திங்கள்கிழமைக்குள் முடிக்க விரும்புவதாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது. இதனையடுத்து இந்த வழக்கை ஜூலை 22-ம் தேதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.
இருப்பினும், ஐ.ஐ.டி சென்னை தனது பகுப்பாய்வில், "மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் ஒட்டுமொத்த அதிகரிப்பு, குறிப்பாக 550 முதல் 720 வரை" அதிகமாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டது. உதாரணமாக, 2023ல் 350 பேருடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு, 700-720 மதிப்பெண்கள் வரம்பில் 2,321 பேர் பெற்றுள்ளனர். அதேநேரம் 2022ல் 99 பேர் மட்டும் இந்த வரம்பில் இருந்தனர். இந்த ஆண்டு 650-699 மதிப்பெண்கள் வரம்பில், 27,885 பேர், கடந்த ஆண்டு 6,939 பேர் மற்றும் அதற்கு முந்தைய வருடம் 4,583 பேர் இருந்தனர். மதிப்பெண்கள் அதிகரிப்புக்கு பாடத்திட்டக் குறைப்பு காரணம் என ஐ.ஐ.டி சென்னை கூறியது.
"இந்த இடங்களில் பல பயிற்சி வகுப்புகள் உள்ளன" என்று கோட்டா மற்றும் சிகார் பகுதிகளில் அதிக செயல்திறன் குறித்து அறிக்கை கூறியது. ராஜஸ்தானின் சிகாரில் உள்ள 24 தேர்வு மையங்களைத் தவிர, நான்கு தேர்வு மையங்கள், ஹரியானாவின் ரேவாரி (டெல்லி பப்ளிக் பள்ளி, ரேவாரி), ஹிசார் (டி.ஏ.வி போலீஸ் பப்ளிக் பள்ளி), பவானி (டெல்லி வேர்ல்ட் பப்ளிக் பள்ளி) மற்றும் மகேந்திரகர் (ராவ் பிரஹலாத் சிங் சீனியர் செகண்டரி பள்ளி) ஆகியவற்றில் தலா ஒரு மையங்களில் 600 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்ற தேர்வர்களின் சராசரி தேசிய சராசரியை விட ஐந்து மடங்கு அதிகமாக இருந்தது.
பாட்னா, கோத்ரா, லத்தூர் மற்றும் ஹசாரிபாக் ஆகிய இடங்களில், நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சி.பி.ஐ.,யின் விசாரணையின் கீழ் உள்ள தேர்வு மையங்களில், அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்களின் விகிதத்தில் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாக இல்லை.
உதாரணமாக, இந்த ஆண்டு பாட்னாவில் உள்ள அனைத்து 70 நீட் தேர்வு மையங்களிலும் 600 மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்களின் சதவீதம் 2% முதல் 6% வரை உள்ளது, அதேநேரம் தேசிய சராசரி 3.5% ஆகும். லத்தூரில் உள்ள 54 தேர்வு மையங்களில், 16 தேர்வு மையங்களில் 6% முதல் 8% வரை அதிக மதிப்பெண் பெற்ற விண்ணப்பதாரர்கள் உள்ளனர். ஹசாரிபாக்கில், அனைத்து ஐந்து தேர்வு மையங்களிலும் 3% முதல் 6% வரை மொத்த விண்ணப்பதாரர்கள் 600 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
ஹசாரிபாக்கில் (ஜார்கண்ட்) உள்ள ஒயாசிஸ் பப்ளிக் பள்ளியில் தேர்வுத் தாள் கசிந்ததாகக் கூறப்படுகிறது, அங்கு 701 தேர்வர்களில் 23 (3%) பேர் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
வியாழனன்று, உச்ச நீதிமன்றம், 23 லட்சம் விண்ணப்பதாரர்களின் நகர வாரியான மற்றும் மைய வாரியான நீட் தேர்வு முடிவுகளை, அவர்களின் அடையாளங்களை மறைத்து, அதன் இணையதளத்தில் சனிக்கிழமை மதியம் 12 மணிக்குள் வெளியிடுமாறு தேசிய தேர்வு முகமையிடம் கூறியது.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, முடிவுகளை வெளியிட முடியும் என்றாலும், மைய வாரியாக வெளியிடுவது கடுமையான சிக்கல்களால் நிறைந்துள்ளது என்றார். "பயிற்சி மையங்கள் உள்ளன, பல சிக்கல்கள் உள்ளன," என்று கூறினார்.
ஆனால் நீதிமன்றம் தொடர்ந்தது. “இல்லை... அதை செய்யட்டும். திங்கட்கிழமைக்குள் இந்த விவகாரம் முடிவடையும் என்று பார்க்க வேண்டும்,” என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் கூறினார், அடுத்த விசாரணையை ஜூலை 22 ஆம் தேதி நிர்ணயம் செய்தார். "உண்மையில், நாங்கள் ஒரு விரிவான விசாரணையில் ஈடுபட்டதற்கான காரணம் என்னவென்றால், குறைந்தபட்சம் பாட்னா மற்றும் ஹசாரிபாக்கில் வினாத்தாள் கசிவுகள் இருந்தன... ஆனால், கேள்வித்தாள்கள் தேர்வுக்கு முன்னதாகவே பரப்பப்பட்டுவிட்டன என்ற பொருளில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டது உண்மை, அது சந்தேகத்திற்கு இடமில்லாதது,” என்று தலைமை நீதிபதி சந்திரசூட் கூறினார்.
"நாம் இப்போது கருத்தில் கொள்ள விரும்பும் கேள்வி என்னவென்றால், இது இந்த இரண்டு மையங்களில் மட்டும் நடந்ததா, அல்லது இது மிகவும் பரவலாக இருந்ததா என்பதுதான், இரண்டு மையங்கள் மட்டும் என்றால் இந்த விஷயத்தில் மறுதேர்வு பற்றிய கேள்வி இல்லை. மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான குறைபாடு உள்ளது, ஏனெனில் அவர்கள் ஒருபோதும் நிரூபிக்கத் தேவையான தரவுகளைப் பெற மாட்டார்கள்,” என்று தலைமை நீதிபதி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.