UPSC Civil Services Application Registration to Start from Feb 19: சிவில் சர்வீஸுக்கான பிரிலிமினரி தேர்வுக்கான முன்பதிவு, யூ.பி.எஸ்.சி-யின் அதிகாரப்பூர்வ தளமான upsc.gov.in-ல் பிப்ரவரி 19 முதல் துவங்குகிறது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், தகுதி, தேர்வு முறை ஆகியவற்றை யூ.பி.எஸ்.சி-யின் இணைய தள பக்கத்திலேயே தெரிந்துக் கொள்ளலாம்.
சிவில் சர்வீஸ் துறைகளான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.ஆர்.எஸ் ஆகிய பணியிடங்களுக்காக இத்தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு முறை
பிரிலிமினரி தேர்வு முதல் மற்றும் இரண்டாம் தாள் என இரண்டு பேப்பர்களைக் கொண்டிருக்கிறது. ஆப்ஜெக்டிவ் மற்றும் வெவ்வேறு பாடங்களில் இருந்து மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு இதில் கேள்வி கேட்கப்படும். பொது அறிவுக் கேள்விகளைக் கொண்டிருக்கும் இரண்டாம் தாளில் மாணவர்கள் 33 சதவீதத்திற்கு மேலாக மதிப்பெண்கள் பெற வேண்டும்.
முதலாம் தாளில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், வரலாறு மற்றும் கலாச்சாரம், ஜியோகிராஃபி, இந்திய அரசியல், இந்திய பொருளாதாரம், சுற்றுச்சூழலியல், சமீபத்திய தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள் என மொத்தம் 7 வித்தியாச பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
தகுதி
ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் தேர்வெழுதுபவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற்றிருக்க வேண்டும். மற்றவைகளுக்கு இந்தியா உட்பட, நேபாள், பூடன், திபெத் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை அணுகவும்.
வயது
ஆகஸ்ட் 1, 2019-ன் படி விண்ணப்பதாரர் 21 முதல் 32 வயதுக்குள்ளானவராக இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டில் விண்ணப்பிப்பவர்களுக்கு வயது வரம்பு சற்று அதிகமாக இருக்கும்.
கல்வித் தகுதி
அரசு கல்வி நிலையங்கள் அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் கல்வி நிலையங்களில் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் டிகிரி பெற்றிருக்க வேண்டும்.
UPSC Civil Services prelims 2019: எப்படி அப்ளை செய்வது?
இதற்கான முன்பதிவு இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்ய கடைசி நாள் மார்ச் 6, 2019 மாலை 6 மணி. அனைத்து வழிமுறைகளையும் படித்துப் பார்த்து விட்டு விண்ணப்பதாரர்கள் ’ஒப்புக்கொள்கிறேன்’ என்ற பட்டனை அழுத்தவும். அப்போது முன்பதிவு எண் திரையில் வரும், அதனை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளவும். பணத்தைக் கட்டிவிட்டு, தேர்வு மையத்தை தேர்ந்தெடுக்கவும். பிறகு ஸ்கேன் செய்யப்பட்ட, ஃபோட்டோ மற்றும் விண்ணப்பதாரரின் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவும்.
இவையனைத்தும் முடிந்த பிறகு ஆட்டோ ஜெனரேட்டட் மெயில் ஒன்று, விண்ணப்பதாரரின் மெயில் ஐ.டி-க்கு அனுப்பி வைக்கப்படும்.