மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2025 போர்டு தேர்வுகளின் பாடத்திட்டத்தில் 15 சதவிகிதம் குறைக்கப்பட்ட செய்தியை மறுத்துள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக சில செய்திகள் கூறினாலும், சி.பி.எஸ்.இ இது போன்ற போலி செய்திகளுக்கு எதிராக விளக்கம் அளித்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Class 10, 12 board exams syllabus not reduced by 15%: CBSE
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2025 போர்டு தேர்வுகளின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 15% பாடத்திட்டக் குறைப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடங்களில் திறந்த புத்தகத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆன்லைன் செய்தி இணையதளங்கள் மற்றும் செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திகளை மறுத்துள்ளது, மேலும் சி.பி.எஸ்.இ அதன் தேர்வு முறை அல்லது உள் மதிப்பீட்டு முறைகளில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை, அல்லது இது தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை நினைவில் கொள்ளவும். எனவே, மேற்கூறிய செய்தியை சி.பி.எஸ்.இ மறுக்கிறது.
”வாரியம் அத்தகைய கொள்கை முடிவு எதையும் எடுக்கவில்லை. வாரியத்தின் கொள்கை மாற்றங்கள் தொடர்பான எந்த தகவலும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சுற்றறிக்கைகள் மூலம் மட்டுமே வெளியிடப்படும்,” என்று சி.பி.எஸ்.இ அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கை 2020 க்கு இணங்க, கல்வி அமைச்சகம் ஆண்டுக்கு இரண்டு போர்டு தேர்வுகளை நடத்துவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு சி.பி.எஸ்.இ.,யிடம் கேட்டுள்ளது. பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு (NCFSE) பரிந்துரைத்தபடி, 2026 ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதம் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு போர்டு தேர்வுகளை திட்டமிட அரசாங்கம் பரிசீலித்து வருகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் சி.பி.எஸ்.இ வெளியிட்ட தகவலின்படி, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான 2025 தியரி தேர்வுகள் பிப்ரவரி 15, 2025 முதல் தொடங்கும். இருப்பினும், முழுமையான சி.பி.எஸ்.இ தேர்வு அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை. இதேபோல், 2024-25 கல்வி அமர்வுக்கான செய்முறைத் தேர்வுகள், திட்டப்பணிகள் மற்றும் உள் மதிப்பீடு ஆகியவை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ- இணைக்கப்பட்ட பள்ளிகளுக்கும் ஜனவரி 1, 2025 முதல் நடைபெறும்.
கூடுதலாக, கடந்த ஆண்டைப் போல, டாப்பர்கள், சிறப்பம்சங்கள் போன்ற எந்த அறிவிப்பும் இருக்காது. 2024 ஆம் ஆண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு ஒட்டுமொத்த பிரிவு, தனிச்சிறப்பு அல்லது ஒருங்கிணைந்த மதிப்பெண் விபரங்களை வாரியம் வழங்காது என்று சி.பி.எஸ்.இ கடந்த ஆண்டு அறிவித்தது. வாரியம் மதிப்பெண்களின் சதவீதத்தை கணக்கிடவோ அறிவிக்கவோ தெரிவிக்கவோ செய்யாது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“