Advertisment

10, 12 பொதுத்தேர்வு தேதிகளை வெளியிட்டது சிபிஎஸ்இ

நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2020ம் ஆண்டின் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுக்கான தேதியை வெளியிட்டுள்ளது.வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் தொடங்குகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE exam

cbse, Cbse results online ,CBSE XII Result

CBSE date sheet Board 2020: நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம்  (சிபிஎஸ்இ) 2020ம் ஆண்டின் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வுக்கான தேதியை (தேர்வு நேர அட்டவணையை)  அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான cbse.nic.in-ல் வெளியிட்டது. அதன்படி, வாரியத் தேர்வுகள் வரும் பிப்ரவரி 15ம் தேதி முதல் தொடங்கும்.

Advertisment

19 வருடத்திற்கு முன்பு சச்சினுக்கு சென்னை ரசிகர் கொடுத்த பேட்டிங் டிப்..

காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் வினாத்தாளைப் படிக்க 15 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. தேர்வில் தேர்ச்சி பெற, மாணவர்கள் கோட்பாடு மற்றும் நடைமுறை தேர்வுகள் இரண்டிலும் தேர்வாக வேண்டும். இந்த வாரியத் தேர்வு  பொறுத்தவரை, தேர்ச்சி பெற 33 சதவீத மதிப்பெண்களைப் பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

                   சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேதி அட்டவணை:  

publive-image

publive-image

publive-image

பிப்ரவரி 15 - மீடியா, விவசாயம், சில்லறை விற்பனை, வாகனங்கள், நிதிச் சந்தைகள் அறிமுகம், சுற்றுலா , உணவு உற்பத்தி, சுகாதாரப் பாதுகாப்பு, மல்டி ஸ்கில் பவுண்டேஷன் கோர்ஸ்.

பிப்ரவரி 17 - வீட்டு அறிவியல், தேசிய கேடட் கார்ப்ஸ், இ- பப்ளிஷிங்  மற்றும் இ- ஆபிஸ்

பிப்ரவரி 20 - தகவல் மற்றும் தொழில்நுட்பம், மார்கெட்டிங் சேல்ஸ்

பிப்ரவரி 22 - கன்னடம், அரபு, பிரஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய, குருங்

பிப்ரவரி 24 - உருது, பஞ்சாபி, பெங்காலி, தமிழ் , தெலுங்கு, சிந்தி, மராத்தி, குஜராத்தி, ஒடியா, அசாமி, திபெத்தியம், ரஷ்ய, பாரசீக, நேபாளி, போடோ, ஸ்பானிஷ், மிசோ, தமாங், ஷெர்பா

பிப்ரவரி 26 - ஆங்கில தொடர்பு, ஆங்கில இலக்கியம்

பிப்ரவரி 28 - எலமண்டரி பிளாக் கே

பிப்ரவரி 29 - இந்தி பாடநெறி ஏ மற்றும் பி

மார்ச் 2 - கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை

மார்ச் 4 - அறிவியல் கோட்பாடு

மார்ச் 6 - வணிகத்தின் கூறுகள்

மார்ச் 7 - சமஸ்கிருதம்

மார்ச் 12 - கணிதம் - ஸ்டாண்டர்ட்  மற்றும் பேசிக்ஸ்

மார்ச் 14 - ஓவியம்

மார்ச் 18 - சமூக அறிவியல்

மார்ச் 20 - கணினி பயன்பாடுகள், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம்.

 

 

சிபிஎஸ்இ வகுப்பு 12 தேதி அட்டவணை: 

publive-image

publive-image

publive-image

 

publive-image

publive-image

 

பிப்ரவரி 15 - மல்டிமீடியா மற்றும் வலை தொழில்நுட்பம், உணவு உற்பத்தி, சில்லறை விற்பனை, வங்கி, உணவு உற்பத்தி, சுகாதாரம்.

பிப்ரவரி 17 - தானியங்கி, அழகு மற்றும் ஆரோக்கியம் , விவசாயம், காப்பீடு, ஒடிஸி நடனம், கதக் நடனம்.

பிப்ரவரி 20 - மின் உபகரணங்கள், ஓவியம், சி.ஆர்.டி.வி.

பிப்ரவரி 22 - உளவியல்

பிப்ரவரி 24 - உடற்கல்வி

பிப்ரவரி 25 - தொழில்முனைவு, ஜவுளி வடிவமைப்பு

பிப்ரவரி 26 - வலை பயன்பாடு, ஊடகம்

பிப்ரவரி 27 - ஆங்கிலம்

பிப்ரவரி 28 - தேர்ந்தெடுக்கப்பட்ட உருது  , சமஸ்கிருதம்

பிப்ரவரி 29 - பொறியியல் கிராஃபிக், அச்சுக்கலை, அச்சிடப்பட்ட ஜவுளி

மார்ச் 2 - இயற்பியல்

மார்ச் 3 - வரலாறு

மார்ச் 4 - மார்க்கெட்டிங்

மார்ச் 5 - கணக்கியல்

மார்ச் 6 - அரசியல் அறிவு

மார்ச் 7 - வேதியியல்

மார்ச் 12 - சுற்றுலா

மார்ச் 13 - பொருளாதாரம்

மார்ச் 14 - உயிரியல்

மார்ச் 16 - வரிவிதிப்பு, இந்துஸ்தானி இசை, கர்நாடக இசை

மார்ச் 17 - கணிதம்

மார்ச் 18 - சட்ட ஆய்வுகள், சுருக்கெழுத்து, உணவு உற்பத்தி

மார்ச் 19 - பஞ்சாபி, தமிழ், சிந்தி, மராத்தி, மணிப்பூரி, அரபு, பிரஞ்சு, ஜெர்மன், பாரசீகம்

மார்ச் 20 - இந்தி

மார்ச் 21 - கணினி அறிவியல்

மார்ச் 23 - புவியியல்

மார்ச் 24 - வணிக ஆய்வுகள்

மார்ச் 26 - வீட்டு அறிவியல்

மார்ச் 28 - உயிரி தொழில்நுட்பம்

மார்ச் 30 - சமூகவியல்

10ம் வகுப்பு மாணவர்களுக்கு,  கணிதத தேர்வில் ஸ்டாண்டர்ட்  மற்றும் பேசிக்ஸ் என இரண்டு வகையாக பிரித்து தேர்வு வைப்பது இதுவே முதல் முறையாகும்.

Cbse
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment