புதுச்சேரி, காரைக்காலில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 14,229 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 15,093 மாணவர்களும் எழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1ஆம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது. இதில், புதுச்சேரியில் 5,758 மாணவர்கள், 6,236 மாணவிகள் என மொத்தம் 11,994 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக புதுச்சேரியில் 31 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
காரைக்காலில் ஆண்கள் 945 மாணவர்களும், 1,290 மாணவிகள் என மொத்தம் 2,235 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 9 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாஹியில் 397 மாணவர்கள், 337 மாணவிகள் 6 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். ஏனாமில் 393 மாணவ மாணவிகள் 3 மையங்களில் தேர்வு எழுத உள்ளனர்.
இதனை தொடர்ந்து, மார்ச் 4ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கிறது. இதில் புதுச்சேரியில் 31 தேர்வு மையத்தில் 6,988 மாணவ மாணவிகள், காரைக்காலில் 9 தேர்வு மையத்தில் 6,45 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். மார்ச் 26ஆம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு துவங்குகிறது. தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை செய்து வருகிறது.
பாபு ராஜேந்திரன், புதுச்சேரி
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“