CMAT 2019 Result: சிமேட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு, உங்கள் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.
இந்தியாவில் உள்ள மேலாண்மைக் கல்லூரிகளில் MBA (Master of Business Administration) மற்றும் PGDM (Post Graduation Diploma in Management) படிப்புகளுக்கு தகுதியான மாணவர்கள் சேர்க்கைக்கான Comman Management Admission Test-CMAT-2019 தேர்வை National Testing Agency நடத்தப்படுகின்றன.
ஆன்லைன் வழியாக நடைபெறும் இத்தேர்வில், குழு கலைந்துரையாடல் (Group Discussion), நேர்காணல் (Personal Interview), எழுத்து நுண்ணறிவுத் தேர்வு (WAT- Written Aptitute Test) ஆகியவை இடம்பெற்று இருக்கிறது. இத்தேர்வின் தரவரிசை அடிப்படையில் மாணவர்கள் கவுன்சலிங்கிற்கு அழைக்கப்படுவார்கள்.
CMAT 2019 Result to be Declared Today: சிமேட் தேர்வு முடிவு!
கடந்த 2012ம் ஆண்டு AICTE அமைப்பால், இந்த அகில இந்திய அளவிலான CMAT தேர்வு, நாடெங்கிலும், மேலாண்மை படிப்பில் மாணவர்களை சேர்க்க நடத்தப்படும் நுழைவுத்தேர்வுகளின் எண்ணிக்கையை குறைப்பதற்காக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. ஏனெனில், பல்வேறான நுழைவுத்தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராவது, அவர்களின் காலம், பணம் மற்றும் உழைப்பு ஆகிய அனைத்தையும் வீணடிக்கிறது.
எனவேதான், தேசியளவில் இந்த நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தேர்வு மதிப்பெண்கள், AICTE அங்கீகாரம் பெற்ற பகுதிநேர எம்.பி.ஏ., படிப்பில் சேரவும் எடுத்துகொள்ளப்படுகின்றன. மேலும், AICTE அங்கீகாரம் பெற்ற மேலாண்மை கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் பல மாநில அளவிலான நுழைவுத்தேர்வுகள், இந்த புதிய CMAT தேர்வால் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடைப்பெற்ற சிமேர் தேர்வு முடிவுகள் இன்று (6.2.19) வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்வு முடிவை பார்ப்பது எப்படி?
படி 1: அதிகாரப்பூர்வ இணையதளமான ntacmat.nic.in, ntagpat.nic.in க்குள் செல்ல வேண்டும்
படி 2: பதிவு எண், ரோல் எண்ணை குறிப்பிட வேண்டும்.
படி 3: இப்போது உங்கள் தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்
படி 5:டவுன்லோட் செய்யும் வசதியும் உண்டு.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க..CMAT 2019 Result
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.