CMDA Jobs; சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் வேலை; உடனே அப்ளை பண்ணுங்க!

சென்னை பெருநகர வளர்ச்சி குழும வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

CMDA invites application for Assistant planner and Planning assistant posts: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) காலியாக உள்ள 30 குழுமத்தில் உதவி திட்ட அமைப்பாளர் மற்றும் திட்ட உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியானவர்கள் 03.01 2022 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

உதவி திட்ட அமைப்பாளர் (Assistant Planner)

காலியிடங்களின் எண்ணிக்கை : 15

கல்வித் தகுதி : BE (Civil or Highways) or B.Arch படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 56,100 – 1,77,500

திட்ட உதவியாளர் (Planning Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 15

கல்வித் தகுதி : BE (Civil or Highways) or B.Arch படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 37,700 – 1,19,500

தேர்வு செய்யப்படும் முறை : கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கணினி வழித் தேர்வு இரு தாள்களாக நடைபெறும். முதல் தாள் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும். இரண்டாம் தாள் தொழில்நுட்பத் தேர்வு, 100 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.cmdachennai.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.01.2022

விண்ணப்பக் கட்டணம் : SC/SCA/ST பிரிவுகளுக்கு ரூ 250, பொது மற்றும் BC/BCM/MBC/DNC பிரிவுகளுக்கு ரூ.500

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cmdadirectrecruitment.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cmda invites application for assistant planner and planning assistant posts

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express