CMDA Jobs; சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் வேலை; உடனே அப்ளை பண்ணுங்க!

CMDA invites application for Driver posts: சென்னை பெருநகர வளர்ச்சி குழும வேலைவாய்ப்பு அறிவிப்பு; தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (CMDA) காலியாக உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. தகுதியானவர்கள் 27.10 2021 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

ஓட்டுநர்

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை : 25

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

பிற தகுதிகள் : செல்லத்தக்க நிலுவையிலுள்ள LMV ஒட்டுநர் உரிமம், மோட்டார் வாகன விதிகளின்படி ஒப்பளிக்க தகுதியான அதிகாரி அளித்துள்ள உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

குறைந்தது 2 வருட ஓட்டுநர் அனுபவம் வேண்டும். முதலுதவி பயிற்சி சான்றிதழ் மற்றும் உடல் தகுதிக்கான மருத்துவச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் SC/SCA/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 2 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 19,500 – 62,000

தேர்வு செய்யப்படும் முறை : ஓட்டுநர் திறனறித் தேர்வு மற்றும் வாகனப் பராமரிப்பு குறித்த செய்முறைத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.cmdachennai.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.10.2021

விண்ணப்பக் கட்டணம் : SC/SCA/ST பிரிவுகளுக்கு ரூ 150, பொது மற்றும் OBC பிரிவுகளுக்கு ரூ.300

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cmdadirectrecruitment.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Educationjobs news here. You can also read all the Educationjobs news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cmda invites application for driver posts

Next Story
பொறியியல் கவுன்சிலிங்: 55,000 இடங்கள் நிரம்பின; முதலாம் ஆண்டு வகுப்பு தொடங்கும் தேதி இழுபறி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com