/indian-express-tamil/media/media_files/nTJoqokqI737JL3k7YIm.jpg)
புதிய பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) இந்திய தொழில்நுட்பக் கழகம்-மெட்ராஸ் (IIT-M) உடன் இணைந்து ‘மெட்ரோ ரயில் தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை (PGDMRTM) என்ற ) ஒரு வருட முதுகலை பட்டயப் படிப்பை வழங்குகிறது. படிப்பில் சேரும் மாணவர்களுக்கு உதவித் தொகை உடன் இந்த படிப்பை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்குகிறது.
இதில் சேர, பி.இ அல்லது பி.டெக் முடித்தவர்கள் வரும் 29-ம் தேதிக்குள் careers.chennaimetrorail.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு முழுநேர ஆண்டு படிப்பின்போது மாதம் ரூ.30,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். படிப்பை முடித்தவுடன், அவர்கள் நேரடியாக சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தில் மாதம் ரூ.62,000 சம்பளத்தில் உதவி மேலாளராக நியமிக்கப்படுவர்.
சிவில் அல்லது எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்கில் பிஇ, பி.டெக், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங் அல்லது மெக்கானிகல் இன்ஜினியரிங் முடித்து 70 சதவீத மார்க் எடுத்தவர்கள் மற்றும் கேட் தேர்வில் தகுதியான மதிப்பெண் பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களை 044-24378000 என்ற எண் அல்லது http:// chennaimetrorail.org என்ற இணையதள பக்கத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என சி.எம்.ஆர்.எல் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.