/tamil-ie/media/media_files/uploads/2023/03/Coimbatore-.jpg)
Coimbatore
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடைபெறுகிறது.
கோவை மாவட்டத்தில் தனித்தேர்வர்களுக்கு 6 தேர்வு மையங்கள் உட்பட மொத்தம் 128 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. இதில் தனித்தேர்வர்கள் உட்பட 360 பள்ளிகளை சேர்ந்த 16,661 மாணவர்கள், 19,166 மாணவிகள் என மொத்தம் 35,827 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
கோவையில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள்#Coimbatorepic.twitter.com/gx3NMpIotV
— Indian Express Tamil (@IeTamil) March 13, 2023
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த தேர்வானது மதியம் 1:15 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு துவங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன் அனைத்து தேர்வர்களும் தேர்வு மையத்திற்குள் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களுக்கு வந்த மாணவர்கள் அவர்களது தேர்வு அறையை நோட்டீஸ் போர்டில் பார்த்துவிட்டு அந்தந்த அறைகளுக்கு சென்றனர். மேலும் தேர்வர்கள் தேர்வறைக்குள் செல்லும் முன்பு அறைக் கண்காணிப்பாளர்கள் அவர்களது உடமைகளை சோதனை செய்து அதன்பின் தேர்வு அறைக்குள் அனுமதித்தனர்.
பொதுத்தேர்வினையொட்டி கோவை மாவட்டத்தில் 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.