நாட்டின் 78வது சுதந்திர தினவிழா இன்று வெகுவிமர்சையாக கொண்டாப்படுகிறது.
அந்தவகையில், கோவை கருமத்தப்பட்டி பகுதியில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கூட்டு முயற்சியில் வடிவமைத்த 3டி பிரிண்டிங் ஏ.ஐ. ரோபோ மற்றும் ட்ரோன் மூலம் வித்தியாசமாக சுதந்திர தின விழாவை கொண்டாடினர்.
3டி ஏ.ஐ. ரோபோ கைகளில் தேசியக் கொடி ஏந்தி வாழ்த்து தெரிவித்தது. மாணவர்கள் வடிவமைத்த ட்ரோனில் நாட்டின் தேசியக்கொடி வானில் பறந்தது.
இந்த சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்திய கப்பல் படை அதிகாரி கமோடர் பாலசுந்தரம், தேசியக்கொடியை ஏற்றி மாணவர்களிடையே பேசினார். அப்போது. ’நாம் 2047 ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த மற்றும் தன்னிறைவு நாடாக மாறும் பாதையில் சென்றுகொண்டிருக்கிறோம்.
இளைய தலைமுறையினர் தங்களுக்கு கிடைக்கும் ஸ்டார்ட்அப், ஆராய்ச்சி, விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான வாய்ப்பு, ஆதரவு மற்றும் வசதிகளை நேர்த்தியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
சிறந்த தொலைநோக்கு பார்வையுடனும், நமது தேசத்தை வழிநடத்தும் பொறுப்பை ஏற்குமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.
இதை தொடர்ந்து முப்படையைச் சேர்ந்த தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு, மாணவர்களின் சிலம்பாட்டம், மற்றும் ட்ரோன் சாகசம் போன்றவை நடைபெற்றது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“