Advertisment

சுகாதாரத் துறை வேலை; குறைந்தபட்ச தகுதி; 29 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

கோவை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 29 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
Sep 30, 2023 16:12 IST
New Update
tn govt jobs

கோவை மாவட்ட சுகாதாரத்துறை வேலை வாய்ப்பு; 29 பணியிடங்கள்; 8 ஆம் வகுப்பு முதல் டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

கோவை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 29 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 05.10.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Advertisment

ஒலியியல் வல்லுநர் (ம) பேச்சு பிறழ்வு சிகிச்சையாளர் (Audiologist & Speech Therapist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Sc., (Speech & Hearing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 23,000

நுண்கதிர்வீச்சாளர் (Radiographer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.Sc., Radiography படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,300

பல் தொழில்நுட்பாளர் (Dental Technician)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Dental Technology படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 20-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,600

அறுவை அரங்கு உதவியாளர் (O.T Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : O.T Technician கோர்ஸ் படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,200

பல்நோக்கு மருத்துவ பணியாளர் (MPHW)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

பாதுகாப்பு காவலர் (பெண்) (Security Guard)

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

காவலர் (Security Guard)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

துப்புறவு பணியாளர் (Sanitary Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

சுகாதார உதவியாளர் (Sanitary Attendant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

மருத்துவமனை உதவியாளர் (Hospital Attendant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 20-35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2023/09/2023090415.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபாலிலோ சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : Member Secretary / Deputy Director Health Services, District Health Society, Office of Deputy Director Health Services, 219, Race Course Road, Coimbatore-18.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://coimbatore.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

#Coimbatore #Jobs
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment