தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு, கோடை விடுமுறை முடிந்து இன்று முதல் வகுப்புகள் தொடங்கப்படுகின்றன.
Advertisment
கோவையில் பல்வேறு பள்ளிகளில் குழந்தைகளை வரவேற்பதற்கு உற்சாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.
நீண்ட விடுமுறைக்கு பிறகு சில குழந்தைகள் பள்ளிகளுக்கு வருவதற்கு அடம் பிடிப்பதுண்டு. இதனால் குழந்தைகளை உற்சாகப்படுத்தும் விதமாக சில பள்ளிகளில் மிக்கிமவுஸ், ஜோக்கர் என குழந்தைகளுக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங்களை போன்று வேடம் அணிந்தும், இனிப்புகள் வழங்கியும் குழந்தைகளை பள்ளி நிர்வாகத்தினர் வரவேற்றனர்.
இதனால் குழந்தைகளும் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு வருகை புரிந்தனர்.
மேலும் முதல் நாள் என்பதால் பெற்றோர்களும் பள்ளிகளுக்கு வருகை தந்தனர். ஆசியரியர்களும் குழந்தைகளை இன்முகத்துடன் வரவேற்றனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“