பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
coimbatore: சர்வதேச ஹவுஸ் கீப்பிங் வாரத்தை முன்னிட்டு கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் சார்பாக பிரிஸ்டைன் ரெசி கோயமுத்தூர் எக்ஸ்போ எனும் கண்காட்சி ரெசிடென்சி ஓட்டல் பால் ரூம் அரங்கில் நடைபெற்றது.
ஹோட்டல் மேனேஜ்மெண்ட் துறையில் பயிலும் மாணவ,மாணவிகள் பயன்பெறும் விதமாக நடைபெற்ற இந்த கண்காட்சியை ரெசிடென்சி ஓட்டல்ஸ் தலைமை செயல் அதிகாரி கோபிநாத் மற்றும் மண்டல நிர்வாக அதிகாரி சார்லஸ் ஃபேபியன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/2674cf1c-33a.jpg)
ஒரு நாள் நடைபெற்ற கண்காட்சியில் கோவையில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த சுமார் 300க்கும் அதிகமான ஓட்டல் மேனேஜ்மெண்ட் துறை சார்ந்த மாணவ - மாணவிகள் பார்வையிட்டனர்.
/indian-express-tamil/media/post_attachments/dbb419f7-adf.jpg)
கண்காட்சியில் ரெசிடென்சி நட்சத்திர ஓட்டலில் பயன்படுத்தப்படும் பல்வேறு சேவைகள் மற்றும் அது சார்ந்த பொருட்களை காட்சி படுத்தி இருந்தனர். ரெசிடென்சி ஓட்டலில் உள்ள அறைகளில் உள்ள வசதிகளை தத்ரூபமாக காட்சிபடுத்தியதோடு,வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் உயர்தர வசதிகள்,அதற்கு பயன்படுத்தப்படும் முன்னனி நிறுவனங்களின் சாதனங்கள்,ஓட்டல் மேலாண்மையில் பின்பற்றப்படும் அனைத்து வசதிகளையும் காட்சிபடுத்தி இருந்தனர்.
/indian-express-tamil/media/post_attachments/edafe79f-6be.jpg)
ஓட்டல் மேனேஜ்மெண்ட் துறை சார்ந்த மாணவ,மாணவிகள் பயன்பெறும் விதமாக ஒரு நாள் நடைபெற்ற இந்த கண்காட்சி நட்சத்திர விடுதிகளில் பின்பற்றப்படும் அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் காட்சிபடுத்தி இருந்தது குறிப்பிடதக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“