Advertisment

சர்வதேச அளவில் கணித தேர்வில் உலக சாதனை; கோவை  பள்ளி மாணவர்கள் அசத்தல்..!

சர்வதேச அளவில் கணித தேர்வில் உலக அளவில் சாதனை படைத்த கோவை பள்ளி மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.

author-image
WebDesk
New Update
kovai

கணித தேர்வில் உலக அளவில் சாதனை படைத்த ஷிவி விக்ரம், பிரணவ் இளங்கோ

கோவையில் உள்ள சி.எஸ். அகாடமியின் மாணவர்களான ஷிவி விக்ரம் மற்றும் பிரணவ் இளங்கோ ஆகியோர் கடந்த 2023 மற்றும் 2024 ஆம், ஆண்டுக்கான கேம்பிரிட்ஜ் சர்வதேச கணிதத் தேர்வில் உலகளவில் சாதனை படைத்துள்ளனர். 

Advertisment

இம்மாணவர்களை பாராட்டும் வகையில் இன்று திருச்சி சாலையில் உள்ள (தனியார்) சி.எஸ் அகாடமி  பள்ளியில் பாராட்டு விழா  நடைபெற்றது. 

இதில் அகாடமியின் இயக்குநர் டாக்டர் விக்ரம் ராமகிருஷ்ணன் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர் மத்தியில் கூறியதாவது,எங்களது பள்ளி மாணவி ஷிவி விக்ரம் சர்வதேச பள்ளி பாடத்திட்டத்தில் ஏ.எஸ். என்கிற உயர் நிலையில் பயில்கிறார். 

அவர் 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டுக்கான தேர்வுகளில் கணிதத்தில் சர்வதேச அளவில் முன்னிலை பெற்றுள்ளார். இந்தியாவில் வெறும் ஐந்தே மாணவர்கள் தான் உலக அளவில் கணிதத்தில் முன்னிலை பெற்றுள்ளனர். அதில் ஷிவியும் ஒருவர் என்பது பெருமையளிக்கின்றது என்றார். 

Advertisment
Advertisement

அதே போல  ஐ.ஜி.சி.எஸ்.இ. எனும் நிலை பாடபிரிவில், பயிலும் மாணவர் பிரணவ் இளங்கோ, 2023மற்றும் 2024ம் ஆண்டுக்கான தேர்வுகளில் கணிதத்தில் சர்வதேச அளவில் முன்னிலை பெற்றுள்ளார். 

இவர் இந்தியாவில் முன்னிலை பெற்ற வெறும் 30 பேர்களில் ஒருவராக உள்ளார். அவருக்கும் பாராட்டுக்களை தெரிவிப்பதாக கூறினார். 

மேலும் இத்தகைய  சாதனைக்காக  பாராட்டு விழா நடத்தி, இரு மாணவர்களையும் வாழ்த்தி, அவர்களுக்கு பள்ளி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும்  கணித ஆசிரியர்களான தாசரி சைதன்யா மற்றும் மோகன பிரியா ஆகியோருக்கு அவர்களின் சிறந்த வழிகாட்டுதலுக்காக சிறப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். 

மேலும் சாதனை படைத்த மாணவர்களையும், அவர்களை இந்த உயரத்தை அடைய பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பள்ளித் தலைவர் சோனி தாமஸ் மற்றும் முதல்வர் சாந்தப்ரியா முன்னிலையில் அகாடமியின் இயக்குநர் டாக்டர் விக்ரம் ராமகிருஷ்ணன் பாராட்டி கௌரவித்தார்.

செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment