கோவையில் சி.எம்.ஐ.எஸ் என்ற தனியார் பள்ளி மற்றும் துபாயின் லேப் ஆஃப் தி ஃப்யூச்சர் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சி பட்டறை மற்றும் கண்காட்சியை நடத்தினர்.
இந்நிகழ்வில், ராக்கெட்டை விண்ணில் செலுத்தும் முறை, ரோபாட்டிக்ஸ், ஏரோமாடலிங் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 6 நாட்கள் பயிற்சி பட்டறையின் போது பல்வேறு தகவல்களை மாணவர்கள் அறிந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
/indian-express-tamil/media/media_files/2025/01/26/M1p34lYvYzdIHNSKG4yB.jpg)
பயிற்சி பட்டறையின் இறுதியில் மாணவர்கள் தயாரித்த ராக்கெட்டுகள், ரோபோக்கள், ஏரோமாடல் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதைக் கண்ட பெற்றோர், தங்கள் குழந்தைகளின் திறமைகள் மேம்பட்டதாகக் கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இவை தங்கள் குழந்தைகள் எதிர்காலத்திற்கு உதவும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
/indian-express-tamil/media/media_files/2025/01/26/vpEthxhdw52jnDoLVhq8.jpg)
அனுபவம் மூலமாக கற்றல் மற்றும் சமூக ஈடுபாடு ஆகியவற்றை மாணவர்கள் இடையே ஒருங்கிணைத்து, அவர்களின் தலைமைப் பண்புகளை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற பயிற்சி பட்டறைகள் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த பயிற்சி பட்டறைகள் எதிர்காலத்திலும் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
செய்தி - பி. ரஹ்மான்