சமூக நலத் துறை வேலை வாய்ப்பு; ரூ. 18000 சம்பளம்; உடனே விண்ணப்பிங்க!

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறை வேலை வாய்ப்பு; 8 ஆம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

author-image
WebDesk
New Update
tn govt jobs

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் மற்றும் பன்முகப் பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Advertisment

வழக்குப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Master of social work (MSW), M.A/ M.Sc Sociology, M.A/ M.Sc Psychology / clinical Psychology படித்திருக்க வேண்டும். 

Advertisment
Advertisements

வயதுத் தகுதி: 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

பன்முகப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி: 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2025/05/2025053181.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி: District Social Welfare Officer, District Collectorate Campus, Old building, Ground floor, Coimbatore 641018.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2025

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

kovai Jobs

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: