கோயம்புத்தூர் டைடல் பார்க் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.12.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Assistant / Deputy Manager (Mechanical)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Degree in Mechanical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 5-7 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 28 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: கல்வித் தகுதி மற்றும் அனுபவத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முகவரி: hr@tidelcbe.com
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.tidelcbe.com/manage/uploads/file/carriers/f2-recruitment-notification-ammechanical-2024-copy.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“