கோவை மாவட்டம், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் ஒரு தந்தையின் இரட்டை மகள்கள், கனிகா மற்றும் கவிதா, 2025 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தலா 474 என ஒரே மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளனர்.
இந்த இரட்டையர்கள், ஒரே அளவிலான முயற்சி மற்றும் கல்வி உறுதிப்பாட்டின் மூலம் ஒரே மதிப்பெண்களைப் பெற்று உள்ளனர்.
தமிழில் 95 மற்றும் 96, ஆங்கிலத்தில் 97 மற்றும் 98, கணிதத்தில் இருவரும் 94, அறிவியலில் 89 மற்றும் 92, சமூக அறிவியலில் 95 மற்றும் 98 எனச் சிறந்த மதிப்பெண்கள் பெற்று உள்ளார்கள்.
பின்னணியில் எளிய குடும்பத்தைச் சேர்ந்தும், பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டும், இருவரும் பெற்ற இந்தச் சாதனை, பல மாணவர்களுக்கு உற்சாகமும், உந்துதலுமான உதாரணமாக அமைந்து உள்ளது.
பள்ளி ஆசிரியர்களும், கிராம மக்கள் அனைவரும் இச்சகோதரிகளின் வெற்றிக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். அருமையான வெற்றி என உறவினர்கள் கொண்டாடுகின்றனர்