என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசையில் முதல் 5 இடங்கள் இலக்கு: கோவை பி.எஸ்.ஜி. கலை-அறிவியல் கல்லூரி நிர்வாகம்

கோவை பி.எஸ்.ஜி. கலை-அறிவியல் கல்லூரி, தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் (NIRF) இந்தியளவில் 10வது இடத்தை பிடித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த 5 கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெறுவதே தங்கள் இலக்கு என்று கல்லூரி நிர்வாகம் கூறி உள்ளது.

கோவை பி.எஸ்.ஜி. கலை-அறிவியல் கல்லூரி, தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசையில் (NIRF) இந்தியளவில் 10வது இடத்தை பிடித்துள்ளது. எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த 5 கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெறுவதே தங்கள் இலக்கு என்று கல்லூரி நிர்வாகம் கூறி உள்ளது.

author-image
WebDesk
New Update
PSG College of Arts & Science

என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசையில் முதல் 5 இடங்கள் இலக்கு: கோவை பி.எஸ்.ஜி. கலை-அறிவியல் கல்லூரி நிர்வாகம்

தேசிய கல்வி நிறுவன கட்டமைப்பு தரவரிசைப் பட்டியலில் (NIRF), கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இந்திய அளவில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்த சாதனையை முன்னிட்டு, கல்லூரிச் செயலாளர் கண்ணைய்யன் மற்றும் முதல்வர் (பொறுப்பு) செங்குட்டுவன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அயராத உழைப்பின் வெற்றி

Advertisment

இந்த வெற்றி ஒட்டுமொத்த பி.எஸ்.ஜி. கல்லூரி குடும்பத்தின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத உழைப்புக்குக் கிடைத்த சான்றாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர். என்ஐஆர்எஃப் தரவரிசையானது, கற்பித்தல் மற்றும் கற்றல் வளங்கள், ஆராய்ச்சி, பட்டமளிப்பு முடிவுகள், சமூக இணைப்பு மற்றும் கண்ணோட்டம் போன்ற பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் உயர்கல்வி நிறுவனங்களை மதிப்பிடுகிறது.

கல்லூரியின் சிறந்த செயல்திறன்

இந்த அனைத்து அம்சங்களிலும் கல்லூரி சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது. குறிப்பாக, ஆசிரியர்களின் தகுதிகள், ஆராய்ச்சி வெளியீடுகள் மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பு முடிவுகள் ஆகியவற்றில் கல்லூரி மிகச் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளது. வலுவான வேலைவாய்ப்புப் பிரிவு, மாணவர்களுக்குத் தேவையான திறன்களை வளர்த்து, உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்காலத் திட்டங்கள்

இந்த சாதனை ஒரு புதிய தொடக்கத்திற்கான படிக்கல் என்றும், எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த ஐந்து கல்லூரிகளில் ஒன்றாக இடம் பெறுவதே தங்கள் இலக்கு என்றும் அவர்கள் தெரிவித்தனர். இந்த இலக்கை அடைய, உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல், பன்முகத் துறைகளில் ஆராய்ச்சியை ஊக்குவித்தல், டிஜிட்டல் கற்றலை விரிவுபடுத்துதல் போன்ற திட்டங்களை வைத்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை

Coimbatore

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: