கலை - அறிவியல் கல்லூரிகளில் ரூ.25,000 ஊதியத்தில் விரிவுரையாளர்கள் நியமனம்: 1,400 பேருக்கு நேர்காணல்

மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், காலிப் பணியிடங்களை நிரப்ப தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Directorate of Collegiate Education

கலை & அறிவியல் கல்லூரிகளில் ரூ.25,000 ஊதியத்தில் உதவிப் பேராசிரியர் நியமனம்: 1,400 பேருக்கு நேர்காணல்

தமிழகத்தில் உள்ள கலை & அறிவியல் கல்லூரிகளில், சுமார் 4,000 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ளது. மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில், இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, ஆயிரத்து 400-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக 800 பேர் நியமனம்

Advertisment

விரிவுரையாளர் நியமனம் தொடர்பாக, கல்லூரி கல்வி இயக்ககம் (Directorate of Collegiate Education) கடந்த ஜூலை 2025-ல், 574 தற்காலிக விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்றது. முதற்கட்டமாக 800 தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, தர்மபுரி, வேலூர், தஞ்சாவூர் மற்றும் நெல்லை என 8 மண்டலங்களில் நியமனப் பணிகள் தொடங்கி உள்ளன. விண்ணப்பப்பதிவு, விவரங்களை உள்ளிடுதல், கட்டணம் செலுத்துதல், சான்றிதழ்களை பதிவேற்றுதல் என அனைத்து நடைமுறைகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றன. இதில் ஆயிரத்து 400க்கும் மேற்பட்டோர் நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மண்டல வாரியாக நேர்காணல்

சென்னை: 222 பேர்

கோவை: 165 பேர்

தர்மபுரி: 224 பேர்

மதுரை: 150 பேர்

தஞ்சாவூர்: 170 பேர்

திருநெல்வேலி: 153 பேர்

திருச்சி: 134 பேர்

வேலூர்: 175 பேர்

இந்த தற்காலிக விரிவுரையாளர் பணியிடங்கள் தற்காலிகமானவை மட்டுமே. இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.25,000 ஊதியமாக வழங்கப்படும். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப மார்ச் 14, 2024 அன்று அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான ஆன்லைன் பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மாநில தகுதித் தேர்வு (SET) உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டன. ஆனால், நீதிமன்ற வழக்குகள் காரணமாக தேர்வு முடிவுகளை வெளியிட முடியவில்லை. எனவே, மாணவர்களின் நலன் கருதி, தற்காலிக விரிவுரையாளர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது. உதவிப் பேராசிரியர் நியமனம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், விரைவில் அனைத்து தடைகளும் நீக்கப்படு, காலியிடங்கள் நிரப்பப்படும் என்றும் ஒரு அதிகாரி தெரிவித்தார்.

Educational News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: